2 Feb 2017

http://www.tnyouthparty.com

website: http://tnyouthparty.com/ tnyouthparty.com
http://tnyouthparty.com/ has been started with the motive of cleaning the corrupted Tamilnadu politics, with the aim to get rid of the major parties in Tamilnadu, namely AIADMK and DMK party. It is still not sure who is behind the creation of this tnyouthparty. But according to their facebook page, , https://www.facebook.com/TNYParty/ they will hold a press meet at Chennai today. Their message to the public reads something like this "வணக்கம் நண்பர்களே,
நாளை நமது தமிழக இளைஞர் கட்சியின் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ உள்ளது. அனைவருடய கருத்துக்களுக்கும் நமது கட்சியில் முக்கியத்துவம் உண்டு. நமது கட்சி சார்பாக என்ன கருத்துக்கள் முன்வைக்க பட வேண்டும் என்பதை தெரிவியுங்கள். முடிந்த அளவு தேவையான கருத்துக்களை மட்டும் பகிரவும். நன்றி. இணைந்து போராடுவோம்."
You can contact them at their email address for registration eelated enquiries at info@tnyouthparty.com

They also set out some basic rules for registration and few more tips, which reads like this "இதுவரை கிட்டத்தட்ட 75 நபர்கள் 200 நபர்களிடம் கையொப்பம் பெற்று நிர்வாகியாக விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். மக்கள் நம் இளைஞர் கட்சியை பெரிதும் வரவேற்றனர் என்ற தகவலையும் தெரிவித்தினர். மிக்க மகிழ்ச்சி.பணிவான வேண்டுகோள்....
நமக்கு வரும் நிறைய கைபேசி அழைப்புகள் மற்றும் whatsapp குறுந்தகவல்களில் நமது நண்பர்கள் பலர் கேட்கும் கேள்விகளில் சில 1) தலைவர் யார் ? 2) நான் இந்த ஊரில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினேன், என்னையும் தலைமை நிர்வாக குழுவில் உடனடியாக சேர்த்துக்கொள்ளுங்கள் 3) என் பின்னால் 1000 முதல் 50000 பேர் கொண்ட கூட்டம் இருக்கிறது, நான் ஏன் நிர்வாகியாக 200 பேரிடம் கையொப்பம் வாங்க வேண்டும் ? 4) நான் கட்சி ஆரம்பிக்கலாம் என இருந்தேன், நீங்கள் ஏன் அதற்குள் கட்சி ஆரம்பித்தீர்கள் ?இதையும் தாண்டி விண்ணப்பபடிவம் குறித்து தகவல் கேட்ட நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.
கேள்வி கேட்ட அணைத்து நண்பர்களுக்கும் ஒரு செய்தி மற்றும் பணிவான வேண்டுகோள். தமிழகத்தின் பரப்பளவு கிட்டத்தட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர், 8 கோடி மக்கள். நமது நிர்வாக குழுவில்(உறுப்பினர்கள் அல்ல) மட்டும் குறைந்த பட்சம் 5 லட்சம் நபர்கள் இருந்தால் மட்டுமே நாம் தமிழகத்தில் பெரிய அரசியல் கட்சிகளை எதிர்கொள்ள முடியும். நமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி வேண்டாம். நான் என்ற ஈகோவை (EGO) அழித்தால் ஒழிய நாம் ஒற்றுமையாக செயல்பட முடியாது. தயவு செய்து சிலரின் சுயநலத்தால் இந்த இளைஞர் எழுச்சியை சிதைத்துவிடாதீர்கள். போராட்ட களத்தில் பங்குபெற்ற அனைவரும் நல்லவர்களே. நல்லவர்களுள் யார் மிக நல்லவர் என்ற போட்டி வேண்டாம். தலைவரை தேடுவதை விட நம்மால் நமது கட்சிக்கு என்ன செய்ய முடியும் என்று சிந்தியுங்கள். இணைந்து செயல்படுவோம். வெற்றி நமதே. நன்றி.மோடி நமது கட்சியில் நிர்வாகியாக வேண்டும் என்று எண்ணினால் கூட 200 மக்களிடம் கையொப்பம் வாங்கியே ஆக வேண்டும்.கட்சியில் இணைய www.tnyouthparty.com என்ற இணையத்தளத்தில் பதியவும்."